வீட்டின் நான்கு மூலைகள் என்று சொல்லப்படும் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை. இந்த நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டியது வைக்கக்கூடாதது என்ன தெரிந்து கொள்வோம்.
ஈசானிய மூலை: ஈசானிய மூலை என்று வடகிழக்கு மூலையை தான் சொல்லுவார்கள். இந்த மூலையை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் வீட்டிற்குள் வரக்கூடிய அனைத்து விதமான ஐஸ்வரியங்களும், நல்லவைகளும் இந்த வழி மூலமாக தான் வீட்டிற்குள் நுழையும்.
இந்த ஈசானிய மூலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கும் அறையாக அமைத்துக் கொள்ளலாம். ஈசானிய மூலையில் அதிகமாக பளு இருக்கும் பொருட்களையும் வைக்கக்கூடாது. குறிப்பாக குளியலறை செப்டிக்டேங்க் கட்டாயம் அமைக்க கூடாது.
குபேர மூலை: தென்மேற்கு மூலையில் உங்கள் வீட்டில் பீரோவை வைத்துக் கொள்ளலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வடமேற்கு மூலையில் மேற்கு பார்த்தவாறு வைத்துக் கொள்ளலாம்.
அக்னி மூலை: வீட்டின் தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்று அழைக்கப்படும். ஒரு வீட்டின் சமையலறை கட்டாயம் அக்னி மூலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். சிலரது வீட்டில் வடகிழக்கு மூலையில் சமயலறை அமைந்திருக்கும். இப்படி வடகிழக்கு மூலையில் சமையலறை இருப்பது உகந்தது அல்ல.
வீட்டின் வடமேற்கு மூலை வாயு மூலை என்று சொல்லப்படும். இந்த வடமேற்கு மூலையில் குளியலறை மற்றும் கழிவறை இவைகள் அமைக்கப்பட வேண்டும். மாறாக வட கிழக்கு திசையில் கழிவறை குளியலறை இருந்தால் வீட்டில் பணப் பிரச்சனை, குழந்தைகளுக்கு கல்வியில் பிரச்சினை போன்றவை உண்டாகும்.
நிருதி மூலை: அதாவது வீட்டின் தென்மேற்கு மூலையை நிருதி மூலை என்று சொல்லுவார்கள். ஒருவருடைய வீட்டில் நிருதி மூலையில் முதன்மை படுக்கை அறை அமைக்கப்பட வேண்டும்.