எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும், குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் அதிகப்படியான நேரம் பொழுதைக் கழிப்பதுண்டு. எனவே, உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் இருக்கும் பொழுது, தமக்குச் சாதகமான திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கிழக்கு திசையில் சமையலறை அமைவதால் வம்ச விருத்தி, குடும்ப தலைவி உடல் நலம் பாதிக்கப்படும்.
தென் கிழக்கு திசையில் அமைந்தால் உணவின் சுவை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் எந்த தடையும் இல்லாமல் இனிதே நடக்கும்.
தெற்கு பகுதியில் அமைந்தால் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் தொல்லை அதிகமாகும்.
தென் மேற்கில் சமையலறை அமைந்தால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும்.
மேற்கு மற்றும் வடமேற்கில் சமையலறை அமைந்தால் நிம்மதியின்மை, சண்டைகள், வீண் செலவுகள் ஏற்படும்.
வடக்கில் சமையலறை அமைந்தால் குடும்பத்தில் உள்ள நபர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரலாம்.
நாம் மேலே சொன்னவாறு தான் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் தீய பலன்கள் தான் நடக்கும்.
சாப்பிடும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி சாப்பிட்டால் உடல் நலம் சீராக இருக்கும். நோய்கள் வராது.