Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கிருஷ்ண ஜெயந்தி பூஜையை எப்படி செய்யவேண்டும்...?

கிருஷ்ண ஜெயந்தி பூஜையை எப்படி செய்யவேண்டும்...?
கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று காலை வீட்டினை தூய நீரினால் அலம்பி விட வேண்டும்.  சுத்தம் செய்தபின் வீட்டில் வண்ண கோலங்கள் இடவேண்டும்.

நம்மால் முடிந்த கிருஷ்ணருடைய சிலை தங்கம் அல்லது வெள்ளி அல்லது பஞ்சலோகத்தால் ஆன  கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்து அல்லது கிருஷ்ணனுடைய படத்தை வைத்து அதற்கு அலங்காரம் செய்து ஆவாகனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
குழந்தையில்லாதவர்கள் இந்த பூஜை செய்தால் கிருஷ்ணரே பிறப்பார் என்பது நம்பிக்கை
பலவிதமான பக்ஷணங்கள் - வெண்ணெய் அனைத்து விதமான பழங்கள் இவையெல்லாம் நிவேதனம் செய்து இரவு பஜனை பாட்டு வாத்தியங்களுடன் நாம் பூஜிக்கவேண்டும். 
 
மறுநாள் காலையில் சுத்தமாக நீராடி அந்த பூஜையை நாம் முடித்து விட்டு நம்மால் முடிந்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ண ஜெயந்தியை பொறுத்தவரை சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப ரொம்ப விசேஷம். அதுவும் முக்கியமாக குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தை செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது ஒரு நம்பிக்கை.
 
இந்த பூஜையில் முக்கியமாக பாரிஜாதம் நந்தியாவட்டம் தாமரை ஆகிய புஷ்பங்களால் அர்ச்சனை செய்வது விசேஷம். அதுபோல துளசி இலைகளால் அர்ச்சனை செய்வதும் நமக்கு புண்ணியத்தைக் கொடுக்கும். பாகவதம் படிப்பது விசேஷம். அதிலும் அந்த பாகவதத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ண ஜனனம் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யவேண்டிய பூஜை முறைகள் !!