Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ஆண்டின் முதல் மாதமாக கருதப்படும் சித்திரையை எப்படி வரவேற்கவேண்டும்...?

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (11:57 IST)
தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் ஏப்ரல் 14-ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோவில்களுக்கு சென்றும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் தமிழ் வருடப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு பிலவ வருடம் பிறந்தது. இந்தாண்டு சுபகிருது வருடம் பிறக்க உள்ளது.

சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

புதிய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்ட வேண்டும். தமிழ் புத்தாண்டு நாளன்று அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, கோவிலுக்குச் சென்று வழிபாட்டை மேற்கொள்வர்.

தமிழ் புத்தாண்டு நாளன்று வீட்டு வாசலில் புதுக்கோலம் இடுவர். அரிசி மாவில் கோலமிட்டு, வண்ணப் பொடிகளில் அலங்காரமிடுவர்.

தமிழ் புத்தாண்டு வழிபாட்டின்போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர்.

இது கேரளாவில் விஷு, அசாமில் பிஹு, பஞ்சாபில் பைஷாகி மற்றும் மேற்கு வங்காளத்தில் போஹெலா போயிஷாக் எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.

மேலும் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுள் சிலைகளுக்கு முன்பு வைத்தும் வழிபாடு செய்வர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments