Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா...?

Webdunia
வார நாட்களில் கடைபிடிக்கப்படும் விரதங்களால் கிடைக்கும் பலன்களை பற்றிப் பார்ப்போம். அனைத்து மதங்களிலும் விரதங்கள் முக்கிய  பங்கை வகிக்கிறது. 
ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒரு வேளை உணவருந்தலாம், இரவில் பால் பழம் சாப்பிடலாம்.
 
திங்கட்கிழமை விரதம் சோமவார விரதம் ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும்.
 
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.
 
புதன் கிழமை விரதம் புகழைக்கொடுக்கும். புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. அன்றைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால்  கல்வி, ஞானம் பெருகும்.
 
குரு பகவானுக்குரிய நாள் வியாழக் கிழமை. அந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும். குருபகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.
 
வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கு, அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக் கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு  உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.
 
சனிக்கிழமை அன்று வெங்கடேச பெருமாளை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments