வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும்.
கிழக்கு திசை: வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.
தென் கிழக்கு திசை: சிரிக்கும் புத்தரை அறை, கூடம், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.
சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.
வைக்க கூடாத திசை: சிரிக்கும் புத்தரின் மீது மதிப்பை வைத்திருக்கும் ஃபெங் ஷுய்யும் புத்த மதமும், அவரை மிக மரியாதையாக கருதுகிறார்கள். சிரிக்கும் புத்தர் என்பவர் வழிபட்டு, மதிப்பளிக்க வேண்டிய சிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும். அதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நீங்கள் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது. இதனால் இச்சிலை நமக்கு வழங்கும் ஆற்றை திறனை இது குறைக்கும்.
இச்சிலையின் உயரம் நம் கண்களின் மட்டம் வரையாவது இருக்க வேண்டும். எப்போதுமே ஒரு சிலையை நாம் மேல்நோக்கி பார்ப்பது தான் நாம் அதற்கு அளிக்கும் மரியாதையாகுமே தவிர, கீழ்நோக்கி பார்ப்பது அல்ல. சமயஞ்சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள அனைத்து படங்கள் அல்லது சிலைகளுக்கும் இது பொருந்தும். அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.