Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எந்த ஹோரைகளில் செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்...!!

எந்த ஹோரைகளில் செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்...!!
ஹோரை அறிந்து நடப்பவனை யாராலும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. இந்த ஹோரைகளை அறிந்து செய்யும் காரியங்கள்,  உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும். ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு.
ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாகும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.
 
சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது  முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.
webdunia
வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஹோரையை சூரியனுக்கு அளித்தனர். அதற்கு அடுத்து சுக்கிரன், அதற்கு அடுத்து புதன்  ஹோரை, 4-வது இடம் சந்திரனுக்கும், 5-வது இடம் சனிக்கும், 6-வது இடம் குருவுக்கும், 7-வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
 
எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும், சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல  ஹோரைகளாக கருதப்படுகிறது.
 
ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப்படுகிறது.  ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை  புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய்  ஹோரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும்.
 
காலை 6 மணிக்கு வரும் ஹோரை, திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும், பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும். 6-1-8-3  இவ்வாறு வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவக்கிரகங்களில் செவ்வாயின் ஆதிக்கம் நிரம்ப பெற்ற போகர்!!