கரூர் வெங்கமேட்டில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டி 108 குத்துவிளக்கு பூஜை மற்றும் சுவாமி ஐயப்பனுக்கு விஷேச அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் அருகே வெங்கமேடு, கொங்கு நகர், ராஜிவ்காந்தி நகர் கிழக்கு பகுதியில் 22-ஆம் ஆண்டு அன்னதான விழாவும், சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் கருப்பண்ண சுவாமி, சுவாமி ஐயப்பன் மற்றும் ஸ்ரீ பகவதி அம்மன் சுவாமிகளுக்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், இரவு குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளுக்கு பூஜை செய்து உலக நன்மை வேண்டியும், அனைத்து வித நோய்களில் இருந்தும் பொதுமக்கள் விடுபட வேண்டியும், செல்வம் செழிக்கவும், மாபெரும் குத்துவிளக்கு நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாகவும், விமர்சியாகவும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்பா சேவா சங்கமும், ஸ்ரீ சபரி யாத்திரைக்குழு மற்றும் சேகர்ஸ் குரூப்ஸ் செய்திருந்தனர்.