Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாளின் சிறப்புகள் பற்றி பார்ப்போம் !!

ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாளின் சிறப்புகள் பற்றி பார்ப்போம் !!
ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நட்சத்திரம் பூரம். அதுவும் ஆடிமாதத்தின் அன்னை அவதரித்ததால் இது திருவாடிப்பூரம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. 

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
 
இந்த நாளில் அன்னை ஆண்டாள் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வது விசேஷம். குறிப்பாக திருப்பாவை 30 பாடல்களையும் இந்த நாளில் பாடி வழிபட்டால் அனைத்து நன்மைகளும் சூழும் என்பது நம்பிக்கை. 
 
வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். 
 
ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர்.  இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. 
 
எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். 
 
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாலட்சுமி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் தெரியுமா...?