பண்டிகை, விஷேச தினங்களில் வாசலில் மாவிலையினால் தோரணம் கட்டுவதை பார்த்திருப்போம். தோரணமில்லைன்னாலும் ஒரு கொத்து மாவிலையையும், வேப்பிலையும் வாசலில் சொருகி வச்சிருப்பார்கள். அதன் காரணம் என்னவென்று தெரியுமா....? பார்ப்போம்.
மாவிலை தோரணம் கட்டியிருந்தால் அந்த வீட்டில் ஏதோ சுபவிசேஷம்ன்னு ஊரார் தெரிஞ்சுப்பாங்க. வேப்பிலை சொருகி இருந்தால் அந்த வீட்டில் அம்மை நோய் தாக்கி இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு சுத்தமாக அந்த இடத்தை வைத்திருப்பார்கள்.
மாவிலையில் லட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம். மாவிலை நேர்மறையான எண்ணத்தை உண்டாக்க வல்லது. காற்றிலிருக்கும் கார்பன் -டை-ஆக்சைடையும், வேப்பிலை காற்றிலிருக்கும் நஞ்சையும் உறிஞ்சும் சக்தி கொண்டது.
இந்த இரு இலைகளுமே எப்போதுமே, எந்த காலக்கட்டத்திலும், அழுகிபோவதில்லை. இலை துளிர்த்து, முதிர்ந்து, காய்ந்து, சருகாகி மக்கித்தான் போகுமே தவிர பாதியிலேயே அழுகிப்போகாது.
கலசங்களில் மாவிலை வைக்க படுகின்றது. சில சமயம் கலசத்தில் வைக்கப்படும் நீரில் வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு, சந்தன எண்ணெய், மஞ்சள் பொடி போன்றவை சேர்க்க படும். மாவிலைக்கு நீரில் உள்ள கிருமிகளை நாசம் செய்யும் சக்தி உண்டு. அது கலச நீரை தூய்மை படுத்தி அதிக அளவு ஆக்சிஜன் வெளியிட்டு கொண்டிருக்கும்.
அதுபோலவே, மானிடப் பிறவியும் தங்கள் வாழ்க்கையினை முழுதாக வாழ்ந்து முடிக்க வேண்டும். வாழும் காலத்திலும், தன் காலத்திற்கு பிறகும் மற்றவர்களுக்கு உபயோகப்படவேண்டும் என்று உணர்வதற்காகதான் வாசலில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுகிறார்கள்.