Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோகங்கள் என்றால் என்ன தெரியுமா...!

காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோகங்கள் என்றால் என்ன தெரியுமா...!
தினசரி காலண்டரில் அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பது நம்மில் பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள்.

இந்த நேரங்களில் செய்யக்கூடியவை எவை, செய்யக்கூடாதவை எவை என்பதை பற்றி பார்ப்போம். அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள்.
 
பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும். யோகங்கள் 27. இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு. அதில் விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள்.
 
யோகத்தின் பெயர்கள் மற்றும் பலன்கள்:
 
1. விஷ்கம்பம் - மனநடுக்கம், 2. ப்ரீதி - பிரியம், 3. ஆயுஷ்மான் - வாழ்நாள், 4. சவுபாக்கியம் - புண்ணியம், 5. சோபனம் - நலம், 6. அதிகண்டம் - பெரிய கண்டங்கள், 7. சுகர்மம் - அறம், 8. திருதி - துணை, 9. சூலம் - சில திசைப் பயண இடையூறுகள், 10. கண்டம் - ஆபத்துக்கள், 11. விருத்தி - ஆக்கம், 12. துருவம் - ஸ்திரத்தன்மை பெறுதல, 13. வியாகாதம் - பாம்பு முதலானவற்றால் ஆபத்து, 14. அரிசனம் - மகிழ்ச்சி, 15. வச்சிரம் - ஆயுதங்களால் தொல்லை, 16. சித்தி - வல்லமை, 17. வியதீபாதம் - கொலை, 18. வரியான் - காயம், 19. பரிகம் - தாழ்வு, 20. சிவம் - காட்சி, 21. சித்தம் - திறம், 22. சாத்தியம் - புகழ், 23. சுபம் - காவல்,  24. சுப்பிரம் - தெளிவு, 25. பிராம்மம் - பிரமை, 26. மாஹேத்திரம் - இந்திரனைப் பற்றிய அறிவு, 27. வைத்திருதி - பேய்களால் தொல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (29-11-2018)!