சந்தான கணபதி ஹோமத்திற்கு வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி, லட்சுமி இரண்டு கலசங்களில் ஆவாகனம் செய்து மலர் மாலை அணிவித்து கருப்பு திராட்சை பழத்தால், வெண்ணை பரப்பிய தட்டில் கணபதி யந்திர கோலமிட்டு சிவப்பு மலர்களால் அர்ச்சித்தல் வேண்டும். அறுகோணமாக குண்டம் அமைத்து கோலம் இட வேண்டும்.
பொருத்தமான நாட்கள்: வளர்பிறை சதுர்த்தி. செவ்வாய் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 1/2 மணி முதல் 6 மணி வரை சுபமுகூர்த்த வேளை.
ஹோமம் பொருட்கள்: தாமரை மலர் நவசமித்து, நவதான்யம் கருங்காலி தேவாரு, சந்தனத் தைலம், 108 வகையாகப் பொருள், ரவா கொழுக்கட்டை, அப்பம், வடை, ஐந்து வகை பழங்கள், பசு நெய் ஆகியன.
நிவேதனங்கள்: பால் சாதம், வெண் பொங்கல், பால், கொழுக்கட்டை புட்டு, அதிரசம், எள்ளுருண்டை, சத்துமாவு கலந்த அஷ்டதிரவியங்கள் கலவை.
பலன்கள்: குழந்தை பேறுக்கான தடை நீங்கும். கருக்காலக் கோளாறு, மலட்டித்தன்மை விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூஜை செய்த பழத்தை கணவந்-மனைவி இருவரும் சாப்பிட வேண்டும்.
மூலமந்திரம்:
ஓம் ஸ்ரீ க்லீம் ஐம்சந்தான கணபதியே ஸ்வாஹா.
ஓம் ஸ்ரீ கணேசாய ஹஸ்தி பிசாசிலிகே கேஸ்வாஹா,
ஓம் கம் கணபதியே சர்வ குல வார்த்தனாய ல்ம்போதராய
ஹ்ரீம் கம் நம ஸ்வாஹா
கடைசியில் கணபதி சோடச நாமத்துதி வழிபாட்டுப் பாடல் பாடவேண்டும்.