Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சனிக்கிழமை விரதங்களும் வழிபடவேண்டிய தெய்வங்களும் !!

சனிக்கிழமை விரதங்களும் வழிபடவேண்டிய தெய்வங்களும் !!
சனிக்கிழமை சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு விசேஷமான கிழமையாக இருந்து வருகிறது. சனிக்கிழமையில் இவர்களை வழிபடுபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது, மிகுந்த பலனைத் தரும். முடிந்தால், கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுங்கள்.
 
மேலும், சனிக்கிழமை திருமாலுக்கு உரிய அருமையான நாள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.
 
இவை தவிர, தினமும் காக்கைக்கு அன்னமிடுவது உத்தமம். கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமையில் விரதமிருப்பது அவசியம். முக்கியமாக, முடிந்த போதெல்லாம் மௌன விரதம் மேற்கொள்ளுங்கள். அமைதியும் நிதானமும் பெறலாம். அதையடுத்து தொட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்!\.
 
சனிக் கிழமைகளில் சனி பகவான் அருள் பெற நீங்கள் வடிக்கும் சாதத்தில் சிறிதளவு தயிர் கலந்து பிசைந்து அதில் கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகள் குறைந்து நன்மைகளை கொடுக்கும். 
 
சனிக்கிழமைகளில் ஒரு கருப்பு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிதளவு கல்லுப்பு போட்டுக் கொண்டு கருப்பு நூல் கொண்டு நன்கு இறுக்கமாக முடிந்து கொள்ளுங்கள். கிழக்கு பார்த்து நின்று கொண்டு உங்கள் தலையை சுற்றி ஏழு முறை திருஷ்டி கழியுங்கள். இது போல 21 சனிக்கிழமைகள் செய்து வர உங்களுக்கு இருந்த கஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (16-10-2021)!