Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஏழு சக்கரங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட முத்திரைகள்....!

ஏழு சக்கரங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட முத்திரைகள்....!
முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிரதானம். கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது.
நமது உடல் இயங்கத் தேவையான உயிர்சக்தியை நமது உடலிலுள்ள சக்கரங்களே உற்பத்தி செய்து தருகின்றன. எனவே இவற்றை சக்தி  மையங்கள் என்று அழைக்கிறோம்.
 
மூலாதாரம், சுவாதிச்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகியன முதன்மை சக்கரங்கள் ஆகும்,இவை நலமாக இயங்கும் வரை உடல் நலமுடன் இருக்கும் என்றும், இவற்றில் ஏதும் தடைகள், தேக்கங்கள் உண்டாகும் பொது உடல் நிலையில் பாதிப்புக்கள்  ஏற்படும்.
 
பெருவிரல் மணிப்பூரகத்தையும், சுட்டுவிரல் அனாகதத்தையும், நடுவிரல் விசுத்தியையும், மோதிரவிரல் மூலாதாரத்தையும், சுண்டுவிரல் சுவாதிச்டானத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் மற்றைய இரண்டு சக்கரங்களான சகஸ்ராரம், ஆக்ஞை ஆகியவை ஞானச் சக்கரங்கள் என்றும்  இவற்றை விரல்களால் கட்டுப்படுத்த முடியாது.
 
நமது உள்ளங்கையில் ஒரு துணைச் சக்கரமும், விரல் மூட்டுகளில் ஒவ்வொரு துணைச் சக்கரங்கள் வீதம் பல சக்கரங்கள் இருப்பதாகவும் அவை இந்த முத்திரைகள் மூலம் தூண்டப்பட்டு மூல சக்கரங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-11-2019)!