மிகச்சிறிய கூட்டிலைகளைக் கொண்ட முள் நிறைந்த இலையுதிர் மரம் வன்னி. பாலைவனத்தில் கூட பசுமையாக வளரும் அற்புத சக்தியுள்ள மரம் வன்னி, மரம் முழுவதும் மருத்துவ பயனுடையது. வன்னிமர காற்று சஞ்சீவிக்காற்றுக்கு ஒப்பானது, வன்னி மரத்தடியில் வாசியோகம் பயில வாசி வசப்படும்.
சில கோவில்களில் ஸ்தல விருட்சமாக வன்னி இருப்பதைக் காணலாம், பழனி பங்குனி உத்திர தீர்த்த யாத்திரையில் வன்னி இலைக்கே முதலிடம். கொடுமுடி ரங்கநாதர் ஆலயத்தில் மிகப்பழமை வாய்ந்த வன்னிமரம் உள்ளது.
விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள். பழனியில் ஸ்ரீலஸ்ரீ மானூர் சுவாமிகள் ஆலயத்தில் வன்னிமர விநாயகரோடு அமைந்துள்ளது. விஜயதசமியில் வன்னிமரத்தை 27 முறை வலம் வர வருட முழுவதும் துன்பம் அனுகாது.
வன்னி இலை காய்ச்சல் அகற்றும், சளியகற்றும், நாடிநடைகளையும் உடல் வெப்பத்தையும் கூட்டும். வன்னி மர இலை, பட்டை, காய், வேர், என சமூல பொடியை தினம் பாலில் தேனீர் போல் அருந்தி வர வாதம், கபம், சன்னிதோஷம், காணாக்கடி நஞ்சு (எந்த பூச்சி விஷம் என்றே தெரியாதது) சொறி ஆகியவை தீரும்.
வன்னிபட்டை பிசினோடு பொடித்து கசாயமாக குடித்துவர சுவாசநோய், பல்நோய்கள்,வாதகப சன்னியும் தீரும், அதிக நாள் சாப்பிடக் கூடாது, உடல் வெப்பம் மிகுந்து தலைமுடி உதிர வாய்ப்புண்டு, உடலுக்கு பலத்தை தரும், வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது.
வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.