Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வைகாசி விசாகம் நாளில் முருக கடவுள் வழிபாட்டு சிறப்புக்கள் !!

வைகாசி விசாகம் நாளில் முருக கடவுள் வழிபாட்டு சிறப்புக்கள் !!
தமிழ் கடவுள் முருகன் அவதார தினம் கொண்டாடப்படுவது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில்தான். நிறைந்த பௌர்ணமி நாளில் முருகன் கோவில்களில்  பால்குடங்களை எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது திரயோதசி, பெளர்ணமி நாளில்தான். வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி  தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு எண்ணற்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
 
முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை. சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
 
இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு  வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை வளர்த்தனர். ஆறுமுகம் கொண்ட முருகன்  தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.
 
வைகாசி விசாகம் நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும்  மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமையல் அறையை அமைத்துக்கொள்வதில் உள்ள வசதிகளும் வாஸ்து முறைகளும் !!