Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஸ்ரீ கால பைரவர் சன்னதியில் இன்னல்களை போக்கும் மிளகு தீப வழிபாடு...!

ஸ்ரீ கால பைரவர் சன்னதியில் இன்னல்களை போக்கும் மிளகு தீப வழிபாடு...!
காசி கோவிலில் பைரவர் தான் முக்கியமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார். 
அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.
webdunia
பைரவருக்கு சிவன் தந்த அந்தஸ்து
 
“எம்மை வணங்கும் பக்தர்களுக்கு நீயும் துணை இருந்து அவர்களை வழிநடத்து. அத்துடன் யார் உன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு எந்த தீங்கும் நெருங்காமல் காப்பாற்று.” என்று இறைவன் சிவபெருமான் பைரவருக்கு அருளாசி வழங்கினார்.
 
ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு  செல்லும் வழக்கம் இருந்தது.
 
மிளகு தீப பரிகாரம்: பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய்  ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.
 
பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். பிறகென்ன…  வெற்றி வெற்றி எதிலும் வெற்றிதான்.
 
காசி, காவல் தெய்வம், கால பைரவர், ஆன்மிகம், வழிபாடு, மிளகு தீபம், நம்பிக்கை, Kalabhairava, Kasi, guard deity,  Spirituality, Worship, Faith, Pepper lamp, Milagu Deepam
 
Sri Kalabhairava temple - To alleviate the suffering Pepper lamp...!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்ற பொருட்கள்...?