Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம நாமம் உச்சரிப்பதன் அற்புத பலன்கள் !!

ராம நாமம் உச்சரிப்பதன் அற்புத பலன்கள் !!
நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும், வெளியேறுதலும்  வேண்டும்.

நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும், தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம்' என்றே நடக்கவேண்டும் .
 
எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய  கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
 
'ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
 
காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்'. எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்'. அந்த நாள்  நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
 
'ராம நாம' ஜெபத்தில் நாம் இருந்தால், நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ, அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு  அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
 
எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும்  ஒன்றே.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-05-2021)!