Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தெய்வீக மூலிகை துளசியின் மகிமைகள்....!!

தெய்வீக மூலிகை துளசியின் மகிமைகள்....!!
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும் மத்தியில் மகாவிஷ்ணுவும் நுனியில் பிரம்ம தேவரும் வாசம்  செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. 

மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அசுவினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.
 
பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் நலமுடன் வாழ தினமும் துளசிமாடத்திற்கு முன்போ அல்லது துளசிச் செடிக்கு முன்போ, கோலமிட்டு, விளக்கேற்றி சுத்தமான நீரை வேரில் ஊற்றி சந்தனம், குங்குமம் புஷ்பத்தால் அலங்கரித்து அர்ச்சித்து, தூபதீப, நிவேத்தியம் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்து மும்முறை வலம் வந்து  வணங்கினால் சுகமான வாழ்வு கிட்டும்.
 
ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான, எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதம் அடைதாக ஐதீகம்.
 
துளசியால் ஸ்ரீ மஹா விஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியை அடைகிறான். மறுபடியும் பிறவியை அடைய மாட்டான்.
 
துளசியைச் சிரஸில் தரிசித்துக் கொண்டு பிராணனை விடுபவன் அநேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-04-2020)!