Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் தங்கம் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்....!!

Advertiesment
தங்கம்
வீட்டில் தங்கள் சேருவதற்கு ஆன்மிக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம்  அதிகரிக்கும்.
தங்கம் சேருவதற்கு அட்சய திருதி அன்று தங்கம் வாங்குவது வழக்கம். அதை தவிர்த்து மற்ற நாட்களில் தங்கம் வாங்க நினைப்பவர்கள்  பரணி, பூரம், பூராடம், போன்ற நட்சத்திரம் வரும் புதன், வெள்ளி கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் வந்து சேரும்.
 
புதிதாக தங்கம் வாங்கி அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ சுற்றி உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும். இதனால் வீட்டில் தங்கம் பெருகும்.

தங்கம்

 
சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் மூன்றும் சேர்ந்து வரும் நாளை தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள் நம்  முன்னோர்கள். இந்த நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலோ அல்லது கோவிலிலோ ‘ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’  என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும். அதோடு இதை செய்வதால் சகலமும் கூடி வரும்.
 
லக்கினத்தில் குரு, 10ல் சந்திரன், 11ல் புதன் போன்ற நிலைகள் இருக்கும் காலகட்டத்தில் தங்கம் வாங்கினாலும் வீட்டில் தங்கம் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவக்கிரக தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு....!