Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சில செய்யக்கூடிய செய்யக்கூடாத ஆன்மீக செயல்கள் என்ன?

சில செய்யக்கூடிய செய்யக்கூடாத ஆன்மீக செயல்கள் என்ன?
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.  நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.

லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.
 
செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும்.
 
திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம். ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க அல்லது வாங்க வேண்டும். 
 
வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி கல் இவைகளில் உட்காரக்கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
 
சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.  வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.
 
எழவு என்றும் கூறக்கூடாது. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில்  சிந்தக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவலிங்க திருமேனியை குளிர்விக்க தாராபாத்திரம் வைக்கப்படுவது ஏன்...?