ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது என்பது வழக்கு. கருட தரிசனம் தன்னிகரற்றது. கருடனை தரிசிப்பது பாவம் போக்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் நோய் விலகும்.
நாகத் தோஷம் பறந்தோடும். கருட தரிசனம் செய்வது பூஜைகளிலும் மந்திர உச்சரிப்பிலும் தெரியாமல் ஏற்படும் தவறுகளை போக்க வல்லது.
மணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனைப் பூஜை செய்தால் பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவார்கள். கெட்ட சகுணங்கள், துர் சக்திகளின் கிரியைகள் போன்ற அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும். அழகிய கருட பகவானின் தரிசனம் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நன்கு உணரலாம்.
அடிக்கடி பாம்பு எதிர்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கருடபஞ்சமி விரதத்தை மேற்கொள்ளலாம். பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கடைப்பிடிப்பார்கள்.
சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்குச்சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் விவரிக்கிறது. கருடாழ்வாரை வணங்கி விருதம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷநோய்கள் தீரும் என கருடதண்டகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.