அபிஷேகப் பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும்,
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம். மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.
பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு.
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும்.
பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
அபிஷேக ஆராதனைகளிலும் பங்கேற்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும், அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், சந்திர கிரக தோஷங்கள் நீங்கும், சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும், வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.