கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது.
நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.
மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும். பழி சொன்னதற்காக; நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்தும் வந்து சேரும். எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும். இந்து தர்மத்தின் முக்கிய விஷயமாக இந்த கர்மா கருதப்படுகின்றது. ஒருவர் திடீரென உயர்வது, தாழ்வதும் அவரின் கர்மாவின் அடிப்படையில் கூட நிகழலாம்.
கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும். கர்மங்கள் அணைத்து முடிக்க பட்ட உடன் அந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்காத இறை நிலையை அடைய முடியும்.