Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீராம அவதாரத்தின் சிறப்புகளுக்கான காரணம் என்ன...?

Webdunia
பகவான் ஸ்ரீமஹா விஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ஸ்ரீராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமர் அவதரித்தார்.

ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, ஸ்வாமியை  வணங்கி வரலாம். அன்று முழுதும் ஸ்ரீராமபிரானை எண்ணிக் கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
 
ஸ்ரீராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ஸ்ரீராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது.
 
ஸ்ரீராம நாமம் என்ற தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக,  பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ஸ்ரீராமாவதாரம்.
 
பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர். இவற்றில் ஸ்ரீராம அவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்களிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான். எப்படி மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் ஸ்ரீமஹா விஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரமே இது.
 
ஸ்ரீராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ஸ்ரீராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments