திருமண விழாவில் முக்கியமாக விஷயமே தாலி அணிவது தான். ஏனென்றால் திருமணமான பெண்களுக்கு தாலி என்பது முக்கியமான ஒன்று. சிலர் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயரில் அணிகின்றனர். மேலும் சிலர் தங்கத்தில் அணிகின்றனர்.
பொதுவாக தாலிக்கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும். கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும்.
தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்றவேண்டும். சிலர் வெள்ளிக்கிழமைகளில் மாற்றலாம் என்று சொல்கின்றனர். அப்படி செய்யக்கூடாது.
தாலி கயிறை மாற்றும் போது யாருமே பார்க்கக்கூடாது. பெற்ற தாயாக இருந்தாலும் பார்க்க கூடாது என்பதுதான் உண்மை. தெரியாதவர்கள் அம்மாவின் துணையுடன் ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம்.
முந்தைய காலத்தில் பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவார்கள். பெண்கள் தினமும் அந்த தாலி கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிப்பார்கள். சிலர் அந்த முறையை இன்னும் செய்கின்றனர். முக்கியமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவரது தாலியை மாற்றக்கூடாது.
திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் மஞ்சள் பூசிய தாலிக்கயிறு, தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாக இருந்தது. தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயையும் அண்ட விடாமல் பாதுகாத்தது.
தாலிக்கயிற்றை மாற்ற உகந்த நாள்:
அனைவரும் பொதுவாக தாலிக்கயிற்றை மாற்றும் நாள் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று தான். ஆடிப்பெருக்கு அன்று எந்தவிதமான நாள் நட்சத்திரம் கிழமைகளையும் பார்க்காமல் தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். புதியதாக திருமணம் ஆனவர்கள் ஆடி 18 அன்று தாலியை மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.