செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.
செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள்.
செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
மகாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும்.
பொருளை இழப்பதே தப்பு என்றால், உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்று கூறுகிறார்கள்.