Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அனுமனுக்கு செந்தூரக்காப்பு வழிபாடு செய்வது ஏன்...?

Anjaneyar
, வெள்ளி, 27 மே 2022 (18:09 IST)
ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை  பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார்.  


நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன்  எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூரம் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு  செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு கூறுகிறது.

சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன. இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது.

இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது என்பது ஐதீகம். அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறைகள் !!