Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபாடு...!!

ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபாடு...!!
ஆடி அமாவாசையை அடுத்து வரும் மிகப்பெரிய அம்மன் விழா ஆடிப்பூரம் ஆகும். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதம் அன்றுபூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த நாள். ஆண்டாள் ஜெயந்தி 27 நட்சத்திரங்களில் பூரம் ஒன்று.

ஆடிப்பூரத்தன்று யோகிகளும் சித்தர்களும் தன் தவத்தினை தொடங்குகின்றனர் என புராணங்கள் கூறுகின்றன. கல்யாணமாகாத பெண்கள் அம்மனை வணங்குவது நல்ல கணவனை அருளும் என்பதும் கல்யாணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசீர்வாதத்தினை சக்தி அருளுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அநேக பெண்கள் ஏழை சுமங்கலி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பணம் வைத்துக் கொடுங்கள். பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.
 
ஆடிப்பூரம், 10-வது திருவிழா. ஆண்டாளின் திருக்கல்யாண நாள் அன்று பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்வர். ஆண்டாளுக்கும் பிடித்த தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் இவற்றினை அளிப்பார்கள்.
 
கோவில்களில் ஆண்டாள் மணப்பெண்ணாக மிக அழகாக அலங்கரிப்பார்கள். பெருமாளுடன் ஆண்டாள் கல்யாணம் நிகழும். அன்று முழுவதும் வழிபாடும் ஆரத்தியும் நடைபெறும். முழு நாளும் வருவோருக்கு பிரசாதம் அளிக்கப்படும். அன்று திருப்பாவை படித்து வழிபாடு நடைபெறும்.
 
சைவ கோவில்களில் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு அநேகர் கண்ணாடி வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழாவாகக் கொண்டாடுவது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கர்ப்பிணிகள் ஆடிப் பூரத்தன்று வளையல் சாத்தி வழிபட்டால் பெண்களுக்கு நல்ல சுகப்பிரசவம் நடைபெறும் என்பது ஐதீகம்.
 
சக்தி கோவில்களில் ஆடிப்பூரம் அன்று லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வழக்கம். திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?