ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி நாளைத் தொடங்க இருக்கிறது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று அனைத்து வடிவிலானப் போட்டிகளிலும் விளையாடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்குப் பின் இந்திய அணிக்கு வேறு எந்த சர்வதேசப் போட்டிகளிலும் இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு நேரடியாக உலகக்கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் இந்தத் தொடரில் விளையாடும் இந்திய அணியே உலகக் கோப்பைத் தொடரிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய வீரர்கள் தங்கள் முழுத்திறமையும் காட்ட முனைப்பாக இருக்கின்றனர்.
இரு அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் டி 20 போட்டி நாளை விசாகப் பட்டணத்தில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் இருந்து ஏறகனவே ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளதால் அவருக்கு ரிஷப் பண்ட் அல்லது விஜய் ஷங்கர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, குர்னல் பாண்டியா, விஜய் சங்கர், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்கண்டே
ஆஸ்திரேலிய அணி விவரம்
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டி ஆர்கே ஷார்ட், பாட் கம்மின்ஸ், அலெக்ஸ் காரே, ஜேஸன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நீல், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சார்ட்ஸன், கானே ரிச்சார்ட்ஸன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஸ்டன் டர்னர், ஆடம் ஜம்ப்ப