Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணிக்கு 150 இலக்கு கொடுத்த பெங்களூரு:

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (17:48 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணி விளையாடி வரும் நிலையில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச முடிவு செய்ததால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது
 
தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் கேப்டன் கோஹ்லி நிதானமாக விளையாடினார். போட்டியின் 16வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த கோஹ்லி அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நினைத்த நிலையில் ரபடா வீசிய 17வது ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்ததால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராத் கோஹ்லி 41 ரன்களும், எம்.எம்.அலி 32 ரன்களும் எடுத்தனர்.
 
டெல்லி அணியின் ரபடா 4 விக்கெட்டுக்களையும், மோரீஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் அக்சார் பட்டேல் மற்றும் லாமிச்சேனே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 150 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்யவுள்ளது. இந்த போட்டியிலும் பெங்களூர் அணி தோல்வி அடைந்தால் தொடர்ச்சியான 6வது தோல்வி என்ற நிலை ஏற்படும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments