பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்தொடரை வென்று இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.
.ஏற்கனவே, முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளாது.
2 வது டெஸ்ட் முல்தானில் நடந்த நிலையில், இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து, 51.4 ஓவர்களில் 281 ரன் கள் எடுத்தது.
பாகிஸ்தான் வீரர் அஹமதி இப்போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அ முதல் இன்னிங்ஸில் 62.5 ஓவர்களில் 202 ரன் கள் எடுத்ததது.
இங்கிலாந்து அணி சார்பில் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
இங்கிலாந்து அணி 2 வது இன்னிங்ஸில் 64.5 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்தது. எனவே, பாகிஸ்தானுக்கு மொத்தம் 355 ரன் கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2 வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது, 102.1 ஓவர்களில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது பாகிஸ்தான்.
அதனால், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி- 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரை வென்றது.