பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 401 ரன்கள் எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணிக்கு 402 என்ற இலக்கு கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும் கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி கடைசி நேரத்தில் அதிரடியாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் விளையாடியதால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் கிடைத்தது. இந்த நிலையில் சற்றுமுன் பாகிஸ்தான் அணி பேட்டிங் தொடங்கியுள்ள நிலையில் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட் இழந்தது.
இரண்டு ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ஆறு ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் தொடக்க அப்துல்லா சபீக் 4ரன்களில் ஆட்டம் இழந்தார்.