Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அரசுக்கு நன்றி கூறிய பிரபல கிரிக்கெட் வீரர்

balaji cricket
, வியாழன், 16 மார்ச் 2023 (15:52 IST)
கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்துள்ளதற்கு அரசுக்கு நன்றி கூறியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் கிரிக்கெட் அகாடமி நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிரிக்கெட் அகாடமி துவக்கவிழா நெல்லையில் சங்கர் நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் பாலாஜி கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

‘’தற்போது கிராமப்புரங்களிலும் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்துள்ளது. முன்பு நகர்ப்புரங்களில் இருந்து வீரர்கள் வந்துகொண்டிருந்தனர்.  நட்சத்திர வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி கிராமத்தில் இருந்துதான் வந்துள்ளார்.

இப்போது நிறைய வாய்ப்புகள் இருப்பதால், கிராமங்களில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

சிஎஸ்கேவின் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டிகளீல் 30 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். போட்டியில் திறமையாக விளையாடும் 11 வீரர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்’’ என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராகுலை கீப்பராக இறக்கவேண்டும்… கவாஸ்கர் கருத்து!