ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்துவுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ரூபாய் 30 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்
தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, பேட்மின்டன் பிரிவில் வெண்கலம் வென்றார். அவர் அரையிறுதியில் தோல்வி அடைந்த போதிலும் மூன்றாவது பரிசுக்கான போட்டியில் வெற்றி பெற்ற வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தந்த பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த பரிசு இன்னும் ஓரிரு நாட்களில் அவருக்கு விழா நடத்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி மேலும் பல பரிசுகள் அவருக்கு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது