Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பவர்ப்ளேதான் பிரச்சனை – புலம்பிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின் !

பவர்ப்ளேதான் பிரச்சனை – புலம்பிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின் !
, ஞாயிறு, 5 மே 2019 (13:46 IST)
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் அணி குவாலிஃபயர் சுற்றுகளுக்கு செல்வதற்கு இருந்த தனது கடைசி வாய்ப்பை நேற்று முன் தினம் பெங்களூர் அணியுடனான தோல்வியின் மூலம் இழந்துள்ளது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி இன்னும் ஒருப் போட்டி இருந்தாலும் குவாலிபயருக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘இந்தாண்டு பவர்பிளே ஓவர்களில்தான் நாங்கள் தோற்று விட்டோம். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும். ராகுலும் கெயிலும் கடந்த ஆண்டைப் போல சிறப்பாக பவர்பிளேயில் விளையாடவில்லை. நாங்கள் ஆதிக்கம் செலுத்தியது கூட மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில்தான். மொத்தமாக நாங்கள் பவர்பிளேயில் சொதப்பிவிட்டோம்.

அதுமட்டுமில்லாமல் சில வீரர்கள் காயமடைந்ததும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. சாம் கரண் சிறப்பாக பேடிங் மற்றும் பவுலிங்கில் செயல்பட்டார். நாங்கள் அடுத்த ஆண்டு எங்கள் குறைகளை சரிசெய்து கொண்டு வருவோம்.  வீரர்கள் அதிகளவில் பாடம் கற்றுக்கொண்டு வருவோம். கடைசி போட்டியை முடிக்க சிறப்பாக செயல்படுவோம்’ எனக் கூறியுள்ளார்.

பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா போதைப் பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதால் பஞ்சாப் அணி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா வாருங்கள்.. மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் – கம்பீர் vs அஃப்ரிடி !