ஈரோ கால்பந்து போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்வே முகத்தில் அடிப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து ரசிகர்களிடையே பிரபலமான போட்டிகளில் UEFA Euro கால்பந்து போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரியா கால்பந்து அணியும், பிரான்ஸ் கால்பந்து அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மில்லியன் வோபர் 38வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இந்த போட்டியில் பிரான்ஸ் அணி கேப்டன் கிலியன் எம்பாப்வே கோல் அடிக்க முயன்றபோது ஆஸ்திரியா ப்ளேயன் கெவின் டான்சோவுடன் மோதியதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனால் நேர தாமதம் ஆனது. அதன் பின்னர் மீண்டும் கிலியன் எம்பாப்வே விளையாடினார். ஆனால் திடீரென வலி தாங்காமல் சுருண்டு விழுந்தார். இதனால் மீண்டும் நேர தாமதம் ஆனது.
இதனால் கடுப்பான ஆஸ்திரியா ரசிகர்கள் கிலியன் வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதாக குற்றம்சாட்டியதோடு, கிலியன் எம்பாப்வேவை வெளியே போல சொல்லி கூச்சலிட தொடங்கினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.