மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இன்று மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் உ.பி., வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது.
இதில், முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேஸ் வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்சியளித்தனர்.
சோபி டைவன் 14 ரன்களிலும், எலிஸ் 10 ரன்னிலும், ஹூதர் 24 ரன்னிலும் அவுட்டாகினர். அதன்பின்னர், அஹூஜா- ரிச்சா கோஷ் சிறப்பாக ஆடினர்,.
அதன்பின்னர், களமிறங்கிய கனிகா 46 ரன்கள் அடித்தார்,. அதன்பின்னர், ரிச்சாவின் அதிரடியில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி 5 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதற்கு முன் நடந்த 5 லீக் போட்டிகளிலும் பெங்களூர் தோற்றது குறிப்பிடத்தக்கது.