Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ மருத்துவர் குழு உறுப்பினருக்கும் கொரோனா – அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:48 IST)
சமீபத்தில் சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இப்போது பிசிசிஐ மருத்துவர் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கும் கொரொனா உறுதியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆனால் அதன் பிறகு எடுக்கப்பட்ட சோதனைகளில் அவர்கள் எல்லோருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இந்நிலையில் பிசிசிஐ மருத்துவர் குழுவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments