Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 22 May 2025
webdunia

12 ஆண்டுகளில் தோனி கேப்டன்சி இல்லாத சி எஸ் கே … அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Advertiesment
தோனி
, வெள்ளி, 25 மார்ச் 2022 (09:54 IST)
சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

12 ஆண்டு கேப்டன் தோனி…

மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.

புதுக்கேப்டன் ஜடேஜா…

சிஎஸ்கே அணிக்குப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் ஜடேஜா அளித்த பேட்டியில் ’அவர் அங்கே தான் இருக்கிறார் என்றும் எது என்றாலும் அவரிடம்தான் கேட்பேன் என்றும் அதனால் புதிதாக நான் கவலைப்பட ஒன்றுமில்லை’ என்றும் கூறியுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் தோனி அணிக்குள் இருப்பதால் ஜடேஜாவுக்கு இந்த சீசன் பெரிய அழுத்தம் எதுவும் இருக்காது என நம்பலாம்.

தோனி

 
தோனியின் கடைசி சீசனா?

தற்போது 40 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால் இதுவே கடைசி சீசனாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக அணியை தயார் படுத்தவே தோனி இருக்கும்போதே ஜடேஜாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சி எஸ் கே வின் எதிர்காலம்…

ஒரு வேளை தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஜடஜா தலைமையில் சி எஸ் கே வலுவாக நடைபோட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இப்போது அணியில் பல இளம் வீரர்கள் வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் வழக்கம்போல சி எஸ் கே ஐபிஎல் தொடரின் பலமிக்க அணிகளில் ஒன்றாக தொடரும் என்று நம்பலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டனாக தோனி நிகழ்த்திய சாதனைகள் என்னென்ன??