Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகமது சிராஜிடம் மன்னிப்புக் கேட்ட டேவிட் வார்னர்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:17 IST)
இந்திய அணியின் முகமது சிராஜ் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் டேவிட் வார்னர்.

நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் நிறவெறி தாக்குதல் பேச்சுகள் எழுந்துள்ளன. நேற்று மைதானத்தில் பீல்ட் செய்து கொண்டிருந்த சிராஜை சில பார்வையாளர்கள் நிற ரீதியாக தாக்கி பேசியுள்ளனர். இதுகுறித்து போட்டி முடிந்ததும் நடுவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் மீண்டும் அதுபோல சிலர் சிராஜ் மற்றும் பூம்ரா ஆகியோரை நிற ரீதியாக தாக்கிப் பேசியுள்ளனர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு நடுவரிடம் புகாரளித்தனர். இதையடுத்து அவ்வாறு பேசிய 6 பேர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரே இந்திய வீரர்கள் பந்துவீசினர்.இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அவ்வாறு பேசிய ஆறு பேரும் நிரந்தரமாக கிரிக்கெட் அரங்குக்குள் நுழைய முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இது குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்கும் நேர்ந்த இனவெறி தாக்குதல்கள் பற்றி தெரிவித்தனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முகமது சிராஜ் மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணியிடம் தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.  இனவெறி தாக்குதல்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடியவை இல்லை. நான் இன்னும் மேம்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை எதிர்பார்க்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments