நியுசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக விளையாடியது உலகக்கோப்பையில் நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினர். அந்தபோட்டியில் அவர் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. அதன் பின் இந்திய அணிக்கு விளையாடாமல் இருக்கும் தோனி, இனி இந்திய அணியில் இடம்பெறுவது சிரமம்தான் எனத் தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தோனி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ‘எனது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன்,, நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அந்த போட்டியில் நான் ஏன் டைவ் அடித்துவிட்டு ரன் அவுட்டை தடுக்கவில்லை என்று இப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.