Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (22:33 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின. இந்த போட்டியின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் அஷ்லே யங் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. 
 
போட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடிய நிலையில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை இங்கிலாந்து அணியின் லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கியதால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.
 
அதன்பின்னரும் இங்கிலாந்து அணி தடுப்பாற்றத்தை ஆடாமல் மேலும் கோல் அடிக்கும் வகையில் அட்டாக் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 28 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்குள் நுழைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த ஷேன் வார்ன்!

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments