Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்த இங்கிலாந்து அரசு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:40 IST)
இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு நாளை இந்திய வீரர்கள் தனி விமானம் மூலமாக செல்ல உள்ளனர். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்க வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அதற்கு பிசிசிஐயும் சம்மதித்துள்ளது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் நாளை குடும்பத்தினருடன் சவுத்தாம்ப்டனுக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் வீரர்கள் குடும்பத்துடன் வந்து தங்குவதற்கு இங்கிலாந்து நாட்டு அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. வீரர்களின் குடும்பத்தினர் பயோ பபுள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments