Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து… தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து… தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
, திங்கள், 27 ஜூலை 2020 (07:34 IST)
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

கொரோனாவுக்கு பின்னர் நடக்கும் முதல் சர்வதேச தொடராக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் உள்ளது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.

அதையடுத்து இப்போது நடந்த வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிராட் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடியது. 2 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 398 ரன்கள் முன்னிலை பெற்றது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் நாள் முடிவில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் எப்படியும் இங்கிலாந்து வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல ஆயத்தமாகி வருகிறது இங்கிலாந்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்: இங்கிலாந்து அபாரம்