Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – சர்ச்சையைக் கிளப்பிய நடுவரின் சர்ச்சை முடிவுகள்!

இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – சர்ச்சையைக் கிளப்பிய நடுவரின் சர்ச்சை முடிவுகள்!
, வெள்ளி, 10 ஜூலை 2020 (18:23 IST)
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் முடிவுகள் சர்ச்சைகளைக் கிளப்பும் வண்ணம் அமைந்துள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வாரியங்கள், ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 8 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் மோசமான வானிலை காரணமாக போட்டி தாமதமாகவே தொடங்கியது.

இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதையடுத்து ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்றாம் நாளில் 3 விக்கெட்களை இழந்து 161 ரன்களை சேர்த்துள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் நடுவர்களின் சில முடிவுகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோல்டர் பந்துவீசும் போது அவர் எல் பி டபுள்யூ கேட்ட மூன்று விக்கெட்களை நடுவர்கள் மறுத்தனர். அவை அனைத்தையும் டிஆர் எஸ் முறையை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்களைப் பெற்றன.

ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சின் போது ஆண்டர்சனின் பந்துவீச்சில் இரு முறை தவறாக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கேம்பலுக்கு தவறாக அவுட் கொடுத்தனர். கேம்பல் ரிவ்யூ மூலமாக தன் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். போட்டியில் இருந்த இரு நடுவர்களும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவாக் போல திறமையானவர் பிருத்வி ஷா – சொன்னது யார் தெரியுமா?