ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசு விவரங்கள் வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த 2022ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இந்த மாதம் 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
இதற்காக பல கோடிகள் செலவு செய்து பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்துள்ளது கத்தார். ஃபிஃபா கால்பந்து போட்டியை நடத்துவதால் முதல்முறையாக உலகக்கோப்பை கால்பந்திலும் கத்தார் அணி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கலந்து கொள்ளும் அணிகள் மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகை விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி உலகக் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாவதாக வரும் அணிக்கு ரூ.244 கோடி வழங்கப்படும்.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் வரும் அணிகளுக்கு ரூ.219 கோடி மற்றும் ரூ.203 கோடி கிடைக்கும். இதுதவிர கால் இறுதி வரை வந்து வெளியேறிய அணிகளுக்கு தலா ரூ.138 கோடியும், இரண்டாவது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றிலேயே வெளியேறிய அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மொத்தமாக பரிசு தொகை மட்டு ரூ.3586 கோடியாகும். கடந்த 2018ல் ரஷ்யாவில் நடந்த கால்பந்து போட்டியில் வழங்கப்பட்ட தொகையை விட இஹு ரூ.328 கோடி கூடுதலான தொகையாகும்.