சமீபத்தில், பிசிசிஐ-ன் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 வது (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, தோனி குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் சவுரவ் கங்குலி 10 மாதங்கள் மட்டுமே தலைமை பொறுப்பில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கங்குலி தலைவர் பதவியை ஏற்றார். இந்நிலையில் அவரது சிஓஏ (Committee of Administrations) பதவியை உடனடியாக நிறைவுக்கு வருகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக விஜயநகரம் மகாராஜாவுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி இரண்டாவதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, தோனி குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது :
இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும். கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கு முழு ஆதரவு அளிப்பேன் அதேபோல் தோனிக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.
நம் அணியை விட்டு வெளியேறி பின்னர் மறுபடியும் அணிக்கு திரும்பி 4 ஆண்டுகள் விளையாடினேன். சாம்பியன்கள் எளிதில் விட்டுக்கொடுத்திட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், திறமை அடிப்படையில் மூத்த வீரர்கள் அணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கங்குலியில் வெளிப்படையான பதில் அனைவருக்கும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தோனி இனிமெல், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.