Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இங்கிலாந்து, நியுசிலாந்து இருவருமே வெற்றியாளர்கள்தான் – ஐசிசியை சாடிய கம்பீர் !

இங்கிலாந்து, நியுசிலாந்து இருவருமே வெற்றியாளர்கள்தான் – ஐசிசியை சாடிய கம்பீர் !
, திங்கள், 15 ஜூலை 2019 (17:34 IST)
நேற்று நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியை நிர்ணயித்தது கேலிக்குரியது என கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலானப் போட்டி டை ஆனதால். சூப்பர் ஓவர் மூலம் முடிவு எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இரண்டு பவுண்டரிகள் உள்பட 15 ரன்களை சேர்த்தது. அடுத்துக் களமிறங்கிய நியுசிலாந்து அணியும் அந்த ஓவரில் 15 ரன்களை சேர்த்தது. ஆனால் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது. அதனால் சூப்பர் ஓவர் விதிகளின் படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

இந்த விதிகள் குறித்து ரசிகர்கள் உள்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் ட்விட்டரில்‘இறுதிப் போட்டியில் எந்த விகிதத்தின் அடிப்படையில் பவுண்டரி அதிகம் அடித்தவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. இது கேலிக்குரிய விதி.  கண்டிப்பாக இந்தப் போட்டி டிராவாகதான் முடிந்திருக்க வேண்டும். நான் இரு அணிகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவிக்கிறேன். ஏனென்றால் இருவரும் வெற்றியாளர்கள்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”என்னது? எனக்குதான் மேன் ஆஃப் தி சீரீஸா?”...ஆச்சரியமடைந்த வில்லியம்சனின் வைரல் வீடியோ