இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேச போட்டிகளில் சதமடித்து 50 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆகிவிட்டது.
கோலி போன்ற உலகின் நம்பர் ஒன் வீரர் ஒருவர் இதுபோல மோசமான பார்மில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட்டிலும் அவர் தொடர்ச்சியாக ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆகி அவரின் செல்லப்பிள்ளையாகி விட்டார். இதுவரை ஆண்டர்சன் பந்தில் 7 முறை அவுட் ஆகி ஏமாற்றம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோலிக்கு அறிவுரை சொல்லும் விதமாக கோலி உடனடியாக சச்சினுக்கு போன் செய்து தான் இப்போது என்ன செய்யவேண்டும் என கேட்கவேண்டும். கோலியின் பேட்டிங் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 2004 ல் இதுபோல தான் சச்சின் தொடர்ச்சியாக அவுட் ஆகி கொண்டு இருந்தபோது, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதில்லை என்று சபதம் எடுத்து ஆடினார். கவர் டிரைவ்களை சுத்தமாக கைவிட்டார். சச்சினின் அந்த செயலை கோலி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.